நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 21ல் துவக்கம்: 28ல் பொது பட்ஜெட் தாக்கல்
Subscribe to Oneindia Tamil

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஜ்யசபா மற்றும் லோக்சபா கூட்டு அமர்வில் உரை நிகழ்த்துகிறார். வரும் 26ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் அதாவது 27ம் தேதி பொருளாாதார ஆய்வறிக்கை சமர்பிக்கப்படுகிறது. இதையடுத்து வரும் 28ம் தேதி நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் 22ம் தேதி முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை நாடாளுமன்றத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. மே மாதம் 10ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications