மும்பை விமான நிலையம் அருகே பாலம் இடிந்து 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Under-construction bridge collapses near Mumbai airport,
மும்பை: மும்பை விமான நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.

மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே ஒரு பாலம் கட்ட்ப்பட்டு வருகிறது. அந்தப் பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை திடீரன இடிந்து விழுந்தது. இதில் கீழே இரு்ந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை உடனடியாக மீட்டு கூப்பர் மற்றும் தேசாய் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர்.

இவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். எட்டு தீயணைப்பு வண்டிகள், நான்கு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. இடிபாடுகளில் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தீயணைப்பு்ப படையினர் தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக, பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள எல்அன்டி நிறுவன பணியாளர்கள் மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பணியில் கவனக் குறைவாக இருந்து விபத்து நேரிடக் காரணமாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+