முப்பெரும் விழா: துபாய் செல்லும் மு.க.ஸ்டாலின்-கி.வீரமணி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பாக வரும் பிப்ரவரி 9ம் தேதி துபாய் இந்தியன் பள்ளி, சேக் ரசீத் உள்ளரங்கத்தில் நடைபெற இருக்கும் முப்பெரும் விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதுரை மாநகர் திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, நாகை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், குடந்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், மற்றும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
கரகாட்டம், பாட்டுமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இவ்விழாவினை நகைச்சுவைப் புயல் தேவகோட்டை இராமநாதன் தொகுத்து வழங்குகிறார்.













Click it and Unblock the Notifications