'மவுனி அமாவாசை'.... கும்பமேளாவில் திரண்ட 3 கோடி பக்தர்கள்!
அலகாபாத்: 'மவுனி' அமாவாசை நாளை முன்னிட்டு அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் சுமார் 3 கோடி பக்தர்கள் திரண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
அலகாபாத்தில் மகா சங்கராந்தி நாளான ஜனவரி 14-ந் தேதியன்று கும்பமேளா தொடங்கியது. இதைத் தொடர்ந்து அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட புனித நாட்களில் சாதுக்களும் பக்தர்களும் பெருமளவில் கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இன்று மவுனி அமாவாசை நாள் என்பதால் சுமார் 3 கோடி பேர் கும்பமேளாவில் குவிந்து புனித நீராடினர். பக்தர்களுக்கு முன்பாக 'அகாடா' சாதுக்கள் புனித நீராடினர். அவர்கள் சரணகோஷங்களை எழுப்பியபடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே நீராடினர்.

நிர்வாண சாதுக்கள்
நிர்வாண சாதுக்களான நாகா சாதுக்களும் இன்று கும்பமேளாவில் பெருமளவு திரண்டிருந்தனர்.

அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள்
அதிகாலை முதலே திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் குவியத் தொடங்கினர். 55 நாள் மகா கும்பமேளா விழாவின் மிக முக்கிய நாள் இது என்பதால் மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியது.

கடும் குளிரில் நீராடினர்
உடலையே உறைய வைக்கும் அளவுக்கு கடும் குளிர் நிலவினாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் வெற்று உடம்புடன் பக்தர்கள் கங்கையில் முழுக்குப் போட்டு புனித நீராடினர்.

முக்கியத்துவம் ஏன்
மெளனி அமாவாசை தினத்தன்றுதான் உலகம் உருவானதாக ஒரு புராணக்கதை உள்ளது. எனவேதான் இந்த நாளில் புனித நீராடுவது முக்கியத்துவம் பெறுகிறது.

3 கோடி பேர்
இன்று காலையில் மட்டும் கிட்டத்தட்ட 20லட்சம் பேர் புனித நீராடியதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இது போகப் போக பல்கிகப் பெருகி கிட்டத்தட்ட 3 கோடி பேர் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலத்த பாதுகாப்பு
அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நிலையில் கும்பமேளாவில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 10-ந் தேதி மகாசிவராத்தி நாள் வரை கும்பமேளா நடைபெற உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications