செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடித்துக் கொண்ட அதிமுகவினர்
நெல்லை: அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
நெல்லை டவுனில் உள்ள பழைய சினிமா தியேட்டரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கதர் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், மாவட்ட செயலாளர் சுதா பரமசிவம், வாரியத் தலைவர் முருகையா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்ட அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, தற்போதைய மாவட்டச் செயலாளர் சுதா பரமசிவம் ஆகியோர் தலைமையில் 3 கோஷ்டிகளாக உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் சப்பாணிமுத்து என்பவர் பேசினார். அப்போது அவர் கட்சியினர் இடையே ஒற்றுமை இல்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சக நிர்வாகிகள் அவரை பேசவிடாமல் இடைமறித்தனர். இதனால் கலகலப்பு ஏற்பட்டு பின்னர் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளைத் தூக்கி வீசி தாக்கினர். இந்த ரகளையைப் பார்த்து அமைச்சர் செய்வது அறியாது திகைத்துப் போய் நின்றார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications