திருப்பதியில் ராஜபக்சேவுடன் 'ரா' இயக்குநர் ரகசிய ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: இந்தியா வருகை தந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அரசியல் பிரமுகர்கள் எவரையும் சந்திக்காத போதும் நாட்டின் மிக முக்கியமான கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா'வின் இயக்குநர் அலோக் ஜோசி சந்தித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியா வந்த ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், புதுவை, ஆந்திரா, டெல்லி ஆகிய இடங்களில் கடும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பீகாரின் புத்தகயாவிலும் ஆந்திராவின் திருப்பதியிலும் வழிபாடுகளை திட்டமிட்டபடி ராஜபக்சே நடத்தியிருந்தார்.

இந்நிலையில் திருப்பதியில் நாட்டின் மிக முக்கியமான கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா'வின் இயக்குநர் அலோக் ஜோசிக், ராஜபக்சேவை ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை திருப்பதியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இருவரும் சுமார் 30 நிமிட நேரம் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

அலோக் ஜோசி, கடந்த மாதம்தான் ரா இயக்குநராகப் பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+