அணு உலை குறித்து வெள்ளை அறிக்கை விடாவிட்டால் 15ல் மிகப்பெரிய போராட்டம்: மீனவர் அமைப்பு
தூத்துக்குடி: கூடங்குளம் அணு உலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் வரும் 15ம் தேதி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர் அமைப்பு சார்பில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடந்தது. இடிந்தகரை ஊர் கமிட்டி தலைவர்கள் ஜான்சன், ராமு ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்ட மீனவ கிராம நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு முத்துநகர் மீனவர் கூட்டமைப்பு தலைவர் சுபாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக்கோரி 550 நாட்களாக போராடி வருகிறோம். இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலை முற்றிலும் செயல் இழந்துவிட்டது என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே அணு உலை குறித்த உண்மை நிலவரத்தை வெள்ளை அறிக்கை மூலம் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் வரும் 15ம் தேதி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர் அமைப்பு சார்பில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications