மத்திய இணை அமைச்சர் நெப்போலியனுக்கு திடீர் நெஞ்சுவலி
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, வந்த மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சர் நெப்போலியனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
நெப்போலியன் உடல் நிலை குறித்து டாக்டர்கள் தரப்பிலோ அல்லது மருத்துவமனை தரப்பிலோ வேறு எந்தத் தகவலும் தரப்படவில்லை.












Click it and Unblock the Notifications