மு.க. ஸ்டாலினிடமிருந்து லட்டு வாங்க துடிக்கும் 3 'சேலம்' நாயகர்கள்!
சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலின் என்ற 'நாயகியிடம்' இருந்து லட்டு வாங்க 3 'நாயகர்கள்' போட்டி போடுவதாக சித்தரித்து திமுக தொண்டர் ஒருவர் சேலத்தில் வைத்த ப்ளெக்ஸ் போர்டு பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது.
சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம்தான் திமுக என்ற நிலை இருந்தது. அவர் உயிருடன் இருந்தபோதே அவரது மகன் ராஜா, 'இளவரசர்' போலத்தான் வலம் வந்தார். வீரபாண்டி ஆறுமுகம் அழகிரி ஆதரவாளராக மாறியதால் அவருக்கு எதிரான பலரும் ஸ்டாலினை ஆதரித்து வந்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் பனமரத்துப்பட்டி ராஜா. இருந்தபோதும் வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் மாவட்ட பொறுப்பாளர் பொறுப்புக்கு எஸ்.ஆர். சிவலிங்கம் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மாவட்ட செயலாளர் பதவிக்கு இம்மூவரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மூவருமே பகிரங்கமாக மாவட்ட செயலாளர் பதவி எனும் லட்டை சாப்பிட ஆசையாக இருக்காதா? என்றே கேள்வி எழுப்புகின்றனர்.
இதைச் சித்தரிக்கும் வகையில்தான் ஸ்டாலினை நாயகியாக்கி அவர் கையில் மாவட்டச் செயலார் பதவி எனும் லட்டைக் கொடுத்து ராஜேந்திரன், ராஜா, சிவலிங்கம் மூவரையும் கதாநாயகர்களாக சித்தரித்து ஒரு ப்ளெக்ஸை திமுக தொண்டர் வைத்துவிட்டார். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட இந்த ப்ளெக்ஸ் பற்றி கேள்விப்பட்ட திமுகவினர் இரவோடு இரவாக அகற்றிவிட்டனர்.
சரி இதில் யாருக்கு பவர்ஸ்டார் கேரக்டர் என்று கேட்கிறீர்களா? வேறு யார்... வீரபாண்டி மகன் ராஜாவுக்குத்தான்!
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications