பெண்களிடம் ஆண்கள் ரொம்ப ரசிப்பது என்ன தெரியுமா...?
லண்டன்: பெண்களிடம் ஆண்கள் எதை அதிகம் ரசிக்கிறார்கள் என்பது குறித்து இதுவரை ஒரு தெளிவான தகவல் இல்லை. ஒவ்வொருவரின் ரசனையும் ஒருமாதிரியாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறலாம். இருப்பினும் பெண்களிடம் ஆண்கள் எதை ரசிக்கிறார்கள் என்பது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு சர்வே வித்தியாசமான தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளதாம்.
ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் அழகாக இருக்க வேண்டும், புஷ்டியாக இருக்க வேண்டும், கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை முதன்மையாக நினைப்பதில்லையாம்.
பெண்களிடம் தங்களுக்குப் பிடித்ததாக மொத்தம் பத்து அம்சங்களை ஆண்கள் அடுக்கியுள்ளனராம் இந்த சர்வேயில். அதுகுறித்துப் பார்ப்போமா...

பளீர் சிரிப்புதான் பெஸ்ட்
ஆண்களைப் பொறுத்தவரை பெண்களிடம் அவர்கள் முதலில் கவனிப்பது அவர்களின் சிரிப்பைத்தானாம். அதாவது பல்வரிசை அழகைப் பார்க்கிறார்களாம். யாராக இருந்தாலும் அழகான பல்வரிசையும், பளீர் சிரிப்பும் இருந்தால் அந்தப் பெண்தான் பேரழகி என்பது ஆண்களின் கருத்தாகும்.

முத்துப் போன்ற பல்லுக்கு ஆண்கள் அடிமையாம்
பெண்களிடம் வெள்ளை வெளேர் என முத்துப் போன்ற பல் வரிசை இருந்தால் அந்தப் பெண் மீதுதான் ஆண்களுக்கு ஆசை அதிகமாக பிறக்கிறதாம். இதனால்தான் எடுத்த எடுப்பிலேயே பெண்களின் பற்களை அதிகம் கவனிக்கிறார்களாம் ஆண்கள்.

58சதவீத ஆதரவு
பெண்களிடம் தங்களுக்குப் பிடித்த விஷயங்களில் பல்வரிசைக்கும், புன்னகைக்கும் ஆண்கள் கொடுத்துள்ள வாக்குகள் 59 சதவீதமாம்.. வித்தியாசமாக இருக்கிறதல்லவா...

பல்லுக்கு அடுத்து தலைமுடி
பற்களுக்கு அடுத்து பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த இன்னொரு விஷயம் அவர்களின் அலைபாயும் தலைமுடியாகும். இதற்கு 51 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

டிரஸ்ஸிங்
ஆண்களின் 3வது விருப்பமாக டிரஸ்ஸிங் வருகிறது. இதற்கு 45 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

ஏன் பல்லுக்கு இப்படி ஒரு ஆர்வம்?
ஏன் பற்களுக்கு ஆண்கள் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று கேட்டால், பற்கள் நன்கு அழகாக, எடுப்பாக, பிரகாசமாக இருந்தால் அதிக தன்னம்பிக்கை கிடைக்கும். எனவே அழகான பல்வரிசை கொண்ட பெண்ணாக இருந்தால் நிச்சயம்,அப்பெண்ணும் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவராக இருப்பார் என்பதால்தான் பெண்களின் பல்வரிசையை முதலில் கவனிக்கிறோம் என்று ஆண்கள் கூறுகிறார்களாம்.
எனவே பெண்களே ஆண்கள் உங்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பது பல் அழகைத்தானாம்.. பிற அழகெல்லாம் அப்புறம்தானாம்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications