தீவிரவாதி ஹபீஸ் சையதுடன் யாசின் மாலிக்: பாஸ்போர்ட்டை முடக்க பாஜக வலியுறுத்தல்

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கின் குற்றவாளி அப்சல்குருவை தூக்கிலிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கக் கோரியும் பாகிஸ்தான் சென்றுள்ள ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், இஸ்லாமாபாத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரதத்தில் மும்பை தாக்குதல் வழக்கின் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையதும் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி, எல்லையில் நமது ராணுவ வீரர்களை கோரமாக படுகொலை செய்த ஹபீஸ் சையதை எப்படி யாசின் மாலிக் சந்திக்கலாம்? இதற்கு மத்திய அரசும் உள்துறை அமைச்சரும் பதில் சொல்ல வேண்டும். இது போன்ற தேசவிரோத பிரிவினைவாத தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களோடு பகிரங்கமாக செயல்படுகிற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம் என்றார்.
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி, மும்பை தாக்குதல் வழக்கில் பிரதான குற்றவாளி ஹபீஸ் சையத். ஹபீஸ் சையதுடன் யாசின் மாலிக் இணைந்து உண்ணாவிரதம் இருந்தது வருத்தத்துக்குரியது. கவலையளிக்கிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ஹபீஸ் சையதை சந்தித்த யாசின் மாலிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இதேபோல் கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் சென்ற ஜம்மு காஷ்மீரின் ஹூரியத் இயக்க தலைவர் மிர்வாஸ் உமரும் ஹபீஸ் சையதை சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications