ஷார்ஜாவில் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற 17 இந்தியர்கள் விடுதலை: தாயகம் திரும்பினர்
சண்டிகர்: ஷார்ஜாவில் பாகிஸ்தானியர் ஒருவரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 16 பஞ்சாபியர்கள் உள்பட 17 இந்தியர்களை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
சட்டவிரோத மது வியாபாரம் தொடர்பாக கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் ஷார்ஜாவில் உள்ள அல் சஜா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த மிஸ்ரி கான் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மேலும் 2 பேர் தாக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்த பஞ்சாபை சேர்ந்த 16 பேர் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 17 இந்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் ஷார்ஜாவில் உள்ள ஷரியத் நீதிமன்றம் அந்த 17 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் துவக்கம் முதலே தங்கள் மீதான குற்றச்சாட்டை அந்த 17 பேரும் மறுத்ததோடு தங்கள் மீது வேண்டும் என்றே கொலை குற்றத்தை சுமத்தியதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இறந்த மிஸ்ரி கானின் குடும்பத்தாருக்கு 17 பேரின் சார்பில் ரூ. 5 கோடி வழங்கப்பட்டதையடுத்து அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. துபாயில் வசிக்கும் இந்திய ஹோட்டல் அதிபரான எஸ்பி சிங் ஓபராய் தான் இந்த ரூ.5 கோடியை வசூல் செய்து அவர்கள் விடுதலையாக உதவி செய்தார்.
நேற்று இரவு அந்த 17 பேரும் டெல்லி வந்திறங்கினர். அங்கிருந்து பஞ்சாப் சென்ற அவர்களில் முதலில் பொற்கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு கிளம்பினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications