நான் முதல்வராக இருந்தபோது தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 8ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளிடுவதற்கும், காவிரியிலிருந்து தண்ணீரைப் பெறுவதற்கும் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்óலை என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று 17-2-1970-ல் திமுக ஆட்சியில்தான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதற்காக 8-7-1971-ல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக ஆட்சியின்போது 27-7-1989-ல் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில்தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2-12-1989-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்குமாறு அப்போதைய பிரதமர் வி.பி. சிங்கிற்கு கடிதம் எழுதினேன்.
வி.பி. சிங் கேட்டுக் கொண்டதன்பேரில் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி 24-4-1990-ல் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாகவே 2-6-1990-ல் நான் முதல்வராக இருந்தபோதுதான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 25-6-1991-ல் நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சியில் இந்த இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை.
7-8-1998-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தின் இறுதியில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் பிரதமர் தலைமையில் காவிரி பாயும் நான்கு மாநிலங்களின் முதல்வர்கள் அடங்கிய காவிரி ஆணையம் அமைப்பது என்றும் முடிவானது.
இது திமுக ஆட்சியில்தான் நடந்தது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5-2-2007-ல் திமுக ஆட்சியில்தான் வெளியிடப்பட்டது. இந்தத் தீர்ப்பு தமிழகத்துக்கு பாதகமாக வந்துள்ளதாக அப்போது ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
ஆனால், இப்போது அந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட பாடுபட்டு வருவதாக சொல்லிக் கொள்கிறார். அதற்கு திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், அதனை திமுக எம்.பி.க்கள் தடுத்தார்கள் என்று குற்றம்சாட்டுகிறார். இந்த வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சியாகவே காவிரி பிரச்சனையில் திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருக்கிறார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications