கோவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயன்ற உத்தமராசா… பொது மக்கள் தர்ம அடி
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பிரசாதத்தில் மயக்கமருந்து கொடுத்து இளம்பெண்ணைக் கடத்த முயன்ற போலிச்சாமியாருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலி சாமியாரின் பெயர் உத்தமராசா என்பதாகும். இவர் சத்யமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தில் தோவாளய மாரியம்மன் கோவிலில் பூஜை செய்ய வந்தார். பரவசத்துடன் பூஜை நடத்திய சாமியார் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தார்.
அப்போது அங்கு வந்திருந்த கிட்டுசாமி, இவரது மனைவி கலாமணி. மணி, இவரது மனைவி ரத்தினா ஆகியோர் வந்திருந்தனர். இவர்களுடன் ஒரு இளம்பெண்ணும் கோவிலுக்கு வந்திருந்தார்.
அவர்கள் 5 பேருக்கும் அந்த சாமியார் பிரசாதம் கொடுத்தார். சிறிது நேரத்தில் பிரசாதம் சாப்பிட்ட 5 பேரும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இதன் பிறகு அந்த போலி சாமியார் அவர்களுடன் வந்த இளம்பெண்ணை கடத்த முயன்றார். தன்னை கடத்த முயற்சி நடப்பதை அறிந்த அந்த இளம்பெண் பயந்து அலறினார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
அப்போது அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்த முயன்றதை கண்டு சாமியாரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பிறகு அந்த போலி சாமியாரை பொதுமக்களும், பக்தர்களும் சத்தியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், கர்நாடக மாநிலம் கொள்ளேகாலை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இளம் பெண்ணை அவர் கடத்த முயன்றது ஏன்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications