மூத்த மகளை 3வது மனைவியாக்கி குழந்தை பெற்று, 2வது மகளை கற்பழிக்க முயன்ற காமக்கொடூரன்
தேனி: தேனியில் மூத்த மகளை மூன்றாவது மனைவியாக்கி குழந்தை பெற்ற நபர் தனது இளைய மகளை கற்பழிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாண்டி(40). அவரது மணைவி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தவுடன் இறந்துவிட்டார். இதையடுத்து பாண்டி இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இரண்டாவது மனைவி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பாண்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பழனி, கொடைக்கானல், வத்தலக்குண்டு என்று ஊர் ஊராகச் சென்று வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து அவர் 21 வயதாகும் தனது மூத்த மகளை மூன்றாவது மனைவியாக்கினார். அவர்களுக்கு தற்போது இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
தற்போது கூடலூரில் ஒரு தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வரும் அவர் 14 வயதாகும் தனது இரண்டாவது மகள் அதாவது இரண்டாவது மனைவியின் மகளை கற்பழிக்க முயன்றார். இதில் பயந்துபோன அந்த சிறுமி காமக்கொடூர தந்தையின் பிடியில் இருந்து தப்பித்து எரசக்க நாயக்கனூரில் உள்ள பாண்டியின் அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டார். பாண்டி தனது அக்கா வீட்டுக்கும் வந்து மகளை சீரழிக்க முயன்றுள்ளார்.
பெற்ற மகளையே கற்பழிக்க முயன்ற பாண்டியை அவரது அக்காவும், பொதுமக்களும் தடுத்து நிறுத்தினர். மேலும் இது குறித்து போலீசிலும் புகார் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications