ஆசிரியையுடன் நெருக்கமாக இருந்து சிக்கிய வால்பாறை தலைமை ஆசிரியர் இடமாற்றம்

வால்பாறையை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் அதே பள்ளியில் ஏற்கனவே பணியாற்றிய ஆசிரியையுடன் இருக்கும் ஆபாச படம் ஒரு இணைய தளத்தில் வெளிவந்தது.
இதனைக் கண்டித்து எஸ்டேட் பகுதி பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற் கொண்டார்.
இந்த நிலையில் கடந்த வாரம் அந்த தலைமை ஆசிரியரின் ஆபாச வீடியோ சி.டி வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்டேட் பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று கூறி பள்ளியை முற்றுகையிட்டனர். நேற்று தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த விவகாரம் பூதாகரமானது.
இதைத்தொடர்ந்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு எஸ்டேட் பகுதி மக்களிடம் நேற்று மாலை சோலையார் அரசு பள்ளி வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தலைமையில் வால்பாறை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் காளிமுத்து, பொள்ளாச்சி தெற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்ணபிரான், பூம்பாவை, ஆனைமலை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சரவணன் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
அப்போது ஒட்டு மொத்த எஸ்டேட் பகுதி மக்களும், இந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் தவறான செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவதில் தலைமை ஆசிரியர் அக்கறை காட்டுவதில்லை.
பள்ளிக்கென கட்டப்பட்ட கழிப்பிடத்தை மாணவிகள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. செக்ஸ் வீடியோ வெளியான ஜனவரி 22-ந் தேதி நள்ளிரவு 11 மணி அளவில் வெளியூரில் இருந்து கார்பெண்டர்களை அழைத்து வந்து சம்பவம் நடந்த அறையை மாற்றி அமைத்துள்ளார் என்றனர்.
சம்மந்தப்பட்ட 3 ஆசிரியர்களையும் கட்டாயம் டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சஸ்பென்ட் என்ற பெயரில் வேறு ஊருக்கு மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வால்பாறை உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அடிக்கடி, பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு பள்ளி மற்றும் ஆசிரியர்களின் நிலையை கண்டறியவேண்டும் என்றும் பொது மக்கள் வற்புறுத்தினர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பொதுமக்களிடம் கூறுகையில், உங்களது புகார்கள் அனைத்தையும் பதிவு செய்துள்ளேன். இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி சம்பவங்கள் அனைத்தும் உண்மையா? என்பதை கண்டறிய ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டு அவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களது விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அதிகபட்ச தண்டனை எதுவோ அது தவறு செய்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அதுவரை வேறு ஆசிரியர்கள் பள்ளிக்கு தற்காலிகமாக நியமனம் செய்யப்படுவார்கள். பள்ளி மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படாமலிருக்க குழந்தைகளை நீங்கள் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்றார்.
இதையடுத்து இன்று காலை மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர்களுடன் பெற்றோரும் வந்திருந்தனர். மாவட்ட கல்வி அதிகாரி கணேசமூர்த்தியும் அங்கு வந்திருந்தார். அவர் மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம், பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியர் நியமிக்கும் வரை பொறுப்பு தலைமை ஆசிரியரும், 2 தற்காலிக புதிய ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று முதல் தங்கள் பணிகளை செய்வார்கள் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications