மருத்துவர்கள் சரியாக கவனிக்கவில்லை; போலீசார் அலட்சியம் காட்டினர்- வினோதினியின் உறவினர்கள்

Subscribe to Oneindia Tamil

Vinothini
சென்னை: ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வினோதினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அலட்சியம் காட்டப்பட்டதாகவும், இதனால்தான் அவர் உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோல் வினோதினி மரணத்துக்கு காவல்துறை அஜாக்கிரதையும் காரணம் என்ற குற்றச்சாட்டு பல தரப்பிலும் வைக்கப்படுகிறது.

ஒருதலைக்காதலால் ஆசிட் வீட்டுக்கு ஆளாகி முகமெல்லாம் கருகி, பார்வையிழந்து மூன்று மாதகாலம் ரணத்தோடு போரடி மரணமடைந்துள்ளார் காரைக்கால் இளம்பெண் விநோதினி. அவரது உடல் கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப் செல்லப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர்கள், மகளிர் அமைப்புகள், அரசியல் வாதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையின் வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஜி.ராமகிருஷ்னன், சீமான் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விநோதியின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது பேசிய அவர்கள், எவ்வளவு போராடியும் காப்பாற்ற முடியவில்லை என்று கதறி அழுதனர். மருத்துவமனையின் சரியான கவனமின்மையே வினோதினியின் இறப்புக்கு காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வர்மா கமிஷன் பரிந்துரைத்த தண்டனை

இதனிடையே வினோதினிஆசிட் வீசிய சுரேஷின் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் புதுசேரி காவல் துறை முடிவு செய்துள்ள நிலையில், வர்மா கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் விநோதினியின் உறவினர்கள் என அனைவரின் கோரிக்கையும் ஒன்றாகவே உள்ளது.

போலீசின் கவனக்குறைவு

வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷ், அந்த சம்பவத்திற்கு முன்னரே பல முறை வினோதினிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். அதனால் சுரேஷ் மீது வினோதினி தரப்பில் புதுச்சேரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி போலீசார் சுரேசை எச்சரித்து மட்டும் அனுப்பியுள்ளனர். அதன் பின்னரே நவம்பர் 14ம் தேதியன்று வினோதினி மீது ஆசிட் வீச்சு சம்பவம் நடந்தது.

நாராயணசாமி குற்றச்சாட்டு

வினோதினி மரணம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி காவல்துறையின் அஜாக்கிரதையும் காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதேபோல், வினோதினியின் உறுவினர்களும், புதுச்சேரி காவல்துறையினர் வினோதினி வழக்கை சரிவர கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

நண்பர்கள் மீது வழக்கு

ஆசிட் வீச்சு சம்பவத்தில் சுரேஷ் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். சுரேஷ் ஆசிட் வாங்க உதவிய அவனது நண்பர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் வினோதினியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+