மப்பு தலைக்கேறி எஸ்.ஐ. கையைப் பிடித்து நறுக்கென்று கடித்த வாலிபர்
சென்னை: சென்னையில் சாலையோரமாக உட்கார்ந்து தண்ணி அடித்ததைத் தட்டிக் கேட்ட சப் இன்ஸ்பெக்டருடன் ஐந்து வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதைத் தட்டிக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் கையைப் பிடித்து ஒருவர் கடித்து விட்டார். இதனால் வலி தாளாமல் சப் இன்ஸ்பெக்டர் அலறினார்.
வடபழனி குமரன் காலனி மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதன் அருகில் சாலை ஓரமாக நேற்று இரவு 11 மணி அளவில் 5 வாலிபர்கள் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வடபழனி சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டி அங்கு வந்தார். சாலையில் உட்காரந்து குடிக்கக் கூடாது என்று அதட்டினார். இதனால் ஆத்திரமடைந்த குடிகார வாலிபர்கள் சப்-இன்ஸ்பெக்டர் விஜய பாண்டியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரவிந்தன் என்ற வாலிபர், போதை தலைக்கேறிய நிலையில் விஜயபாண்டியின் வலது கையில் கடித்து வைத்தார். வலி தாங்க முடியாமல் துடித்தார் விஜயபாண்டி. இருந்தாலும் விடாமல் ஐந்து பேரும் தப்பி விடாமல் மடக்கிப் பிடித்துக் கொண்டு போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த போலீஸார் எஸ்.ஐ. கையைக் கடித்து, குடிபோதையில் தகராறு செய்த அரவிந்தனையும் அவரது நண்பர்களான கண்ணன், கணபதி, பாலாஜி, வினோத் ஆகியோரைம் கைது செய்தனர்.
-
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications