பிஸ்டோரியஸ் வீட்டில் ரத்தக்கறை படிந்த கிரிக்கெட் பேட் கண்டுபிடிப்பு

இதனால் பிஸ்டோரியஸின் காதலி கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பிஸ்டோரியஸ் தனது காதலியான ரீவா ஸ்டீன்கேம்ப்பை காதலர் தினத்தன்று சுட்டுக் கொன்று கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருடன் வந்து விட்டானோ என்று கருதி சுட்டதாக பிஸ்டோரியஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் பிஸ்டோரியஸுக்கும், அவரது காதலிக்கும் இடையே வாக்குவாதம் மூண்டு அதன் பின்னர்தான், பிஸ்டோரியஸ், துப்பாக்கியால் சுட்டதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இதற்கிடையே, ரீவாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. அதில் ரீவாவின் மண்டை ஓடு முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், நசுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போலீஸாரை குழப்பியுள்ளது. மேலும் பிஸ்டோரியஸ் வீட்டிலிருந்து ஒரு ரத்தக்கறை படிந்த கிரிக்கெட் பேட்டும் சிக்கியுள்ளது. எனவே ரீவாவை பிஸ்டோரியஸ் முதலில் பேட்டால் சரமாரியாக அடித்துக் காயப்படுத்தினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கிரிக்கெட் பேட் சிக்கியிருப்பதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த வழக்கில் பிஸ்டோரியஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்குமாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications