கருணை மனுக்களை நிராகரிப்பது குடியரசுத் தலைவர் மட்டும்தானா...?
டெல்லி: கருணை மனுக்களை நிராகரிக்கும் முடிவுகளை குடியரசுத் தலைவர் மட்டுமே நிராகரிப்பதில்லையாம். அந்த நடவடிக்கைகளில் மேலும் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். மேலும் இது பல்வேறு தொடர் நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்டதாக உள்ளது.
பிரணாப் முகர்ஜி இதுவரை இல்லாத அளவுக்கு அதி வேகமாக கருணை மனுக்கள் மீ்து நடவடிக்கை எடுக்கும் குடியரசுத் தலைவர் என்ற பெயரை வாங்கி விட்டார். இது பரபரப்பையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த பின்னர் கடந்த 7 மாதங்களில் 7 கருணை மனுக்களை பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். இதுதான் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரணாப்பின் தனிப்பட்ட முடிவு இல்லை
அரசியல் சட்டம், சட்ட வரைவு 72 ன் படி கருணை மனுக்கள் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது அவரது தனிப்பட்ட முடிவாக இல்லாமல் கூட்டு முடிவாக மட்டுமே இருக்கும்.

அமைச்சரவைக் குழு
கருணை மனுக்கள் குறித்து முடிவு செய்ய மத்திய அமைச்சர்கள் கவுன்சில், குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கும். அதன்படியே சட்ட விதிமுறைகளின்படி தூக்குத் தண்டனைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கிறார்.

முழு அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கே
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் கருணை மனுவை ஏற்று மன்னிப்பு வழங்குவது அல்லது தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது அல்லது நிரந்தரமாக நிறுத்துவது அல்லது மனுவை நிராகரிப்பது அல்லது மரண தண்டனைக்கு மாற்றாக ஆயுள் தண்டனை வழங்குவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது.

53வது சட்டப் பிரிவு சொல்வது என்ன...
அரசியல் சட்டத்தின் 53வது சாசனத்தின்படி மத்திய நிர்வாகத்தின் அதிகாரத்தை நேரடியாகவோ அல்லது சட்ட பிரிவுகளின்படி அதிகாரிகளை கொண்டோ நிறைவேற்றும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டமன்ற தற்காலிகமாக செயல்படாமல் இருக்கும் போது மட்டுமே அவரது அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.

74வது சட்டப் பிரிவு என்ன சொல்கிறது என்றால்...
74 வது சாசனத்தின்படி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பெயரிலேயே செயலாற்ற வேண்டும். மேலும் அமைச்சர்கள் குழு, குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் எந்த ஒரு ஆலோசனைக்கு எதிராகவும் எந்த ஒரு கோர்ட்டும் விசாரிக்க முடியாது.

14 கருணை மனுக்களையும் நிராகரித்த சர்மா
சங்கர் தயாள் சர்மா குடியரசுத் தலைவராக இருந்தபோது, தனது பதவிக் காலத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட 14 கருணை மனுக்களையும் நிராகரித்துள்ளார்.

ஒரே ஒரு தூக்கை ஆயுளாக மாற்றிய கே.ஆர்.நாராயணன்
அதேபோல கே.ஆர்.நாராயணன், ஒரே ஒரு கருணை மனுவிற்கு மரண தண்டனைக்கு பதிலாக மாற்று தண்டனை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ஒரு மனுவை நிராகரித்த கலாம்
அப்துல் கலாம், ஒரு கருணை மனுவை நிராகரித்தும், மற்றொன்றை வேறு தண்டனை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். கலாம் தனது பதவி காலம் முடியும் போது 25 கருணை மனுக்களை நிலுவையில் வைத்திருந்தார்.

34 பேரை மன்னித்த பிரதீபா.. 3 தமிழர்களுக்கு மட்டும் நிராகரிப்பு
பிரதீபா பாட்டீல் தனது பதவி காலம் முடியும் போது 34 பேருக்கு மன்னிப்பு வழங்கி உள்ளார். 3 மனுக்களை இவர் நிராகரித்துள்ளார். இந்த மூன்று பேரும் ராஜீவ் காந்தி கொலையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications