நஷீத் விவகாரம்- இந்தியத் தூதரை நேரில் அழைத்து அதிருப்தி தெரிவித்த மாலத்தீவு
மாலே: மாலத்தீவு விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னாள் அதிபர் முகம்மது நஷீத், தொடர்ந்து இந்தியத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்திருப்பதால் ஆத்திரமடைந்துள்ள மாலத்தீவுகள் அரசு, இந்தியத் தூதர் முலாயை நேரில் வரவழைத்து எதிர்ப்பு தெரிவலித்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக மாலேவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார் நஷீத். அவருக்கு எதிராக உள்ளூர் கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து அவரும், சில எம்.பிக்களும் இந்தியத் தூதரகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்தனர். தான் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை செய்ய சதி செய்யும் முயற்சிதான் இந்த கைது வாரண்ட் நடவடிக்கை என்று நஷீத் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் சர்வாதிகாரி முகம்மது அப்துல் கயூம் இதற்குப் பின்னணியில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஐந்து நாட்களாக இந்தியத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள நஷீத்தால், மாலத்தீவு அரசு அதிருப்தி அடைந்துள்ளது. இதையடுத்து இந்தியத் தூதர் முலாயை நேரில் வரவழைத்த மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம், அவரிடம் தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்தது.
இதுகுறித்து அதிபர் முகம்மது வாஹீத்தின் செய்தித் தொடர்பாளர் மசூத் இமாத் கூறுகையில், முலாய் வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் அரசின் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையும் இந்தியத் தூதரிடம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் நஷீத்விவகாரம் தொடர்பாக மாலத்தீவு வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சு நடத்தியுள்ளார்.
தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் அங்கிருந்தபடியே மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல் சமத் அப்துல்லாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கடந்த 4 நாட்களில் 2வது முறையாக பேசியுள்ளார் குர்ஷித் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications