For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதன், வியாழன் ஸ்டிரைக் நடந்தால் ரூ.20,000 கோடி நஷ்டம்?

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விலைவாசி உயர்வு, தனியார் மயமாக்குதல், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எதிராக வரும் 20 மற்றும் 21ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு 11 வர்த்தக சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அவர்களின் அழைப்பை ஏற்று அந்த 2 நாட்களும் நாடு முழுவதும் உள்ள அரசு வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. மேலும் பெங்களூரில் அரசுப் பேருந்துகள், ஆட்டோக்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருக்கின்றன.

இதற்கிடையே இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. மத்திய அரசின் முயற்சி தோல்வி அடைந்து போராட்டம் அறிவித்தபடி இரண்டு நாட்களும் நடந்தால் ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
If the trade unions strike goes on as per the plan, it will incur a loss of Rs.15,000 crore to Rs. 20,000 crore in the two days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X