அடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆள் வைத்து மருமகனைக் கொன்ற மாமியார்
ஒசூர்: பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண், அடிக்கடி உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்த தனது மருமகனை ஆள் வைத்து வெட்டிக் கொன்றார். இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்தனர்.
பிப்ரவரி 1ம் தேதி ஒசூர் அருகே உள்ள மாசிநாயக்கன்பள்ளி என்ற இடத்திலிருந்து கெலமங்கலம் செல்லும் சாலையில் ஒரு ஆண் உடல்கிடந்தது. இதையடுத்து போலீஸார் அதை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கொல்லப்பட்டவரின் பெயர் ரியாஸ் அகமது என்றும்,பெங்களூர் துபாய் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் 36 வயதானவர் என்றும் தெரிய வந்தது. இவர் கொலை செய்யப்பட்டதற்கான பரபரப்புக் காரணமும் தெரிய வந்தது.
அன்வர் பாட்ஷா - குல்ஷார் தம்பதியின் மூத்த மகளைத்தான் ரியாஸ் மணந்திருந்தார். அன்வர் பாஷா 14 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். குல்ஷார் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் தனது மனைவியின் தாயாரை தவறாக பார்க்க ஆரம்பித்தார் ரியாஸ். மேலும் தவறான உறவுக்கும் அழைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குல்ஷார் மருமகனைக் கண்டித்தார். மகளிடம் சொல்லி விடுவேன் என்றும் எச்சரித்தார். ஆனாலும் ரியாஸின் செயல்நிற்கவில்லை. இதனால் கோபமடைந்த குல்ஷார், பெங்களூர் திலக் நகரை சேர்ந்த ஷேக் ஷபீர் என்பவர் மூலம், இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படையினரை ஏவி, ரியாஸ் அகமதுவை கொலை செய்ய திட்டமிட்டார்.
ஷேக் ஷபீர், குருப்பாளையத்தை சேர்ந்த 2 பேரை ஏவினார். அவர்கள் ரியாஸைக் கண்காணித்து வந்தனர். பின்னர் கடந்த 11ம் தேதி ரியாஸ் அகமதுவை இரவில் பின் தொடர்ந்து சென்று தாக்கினர். அதன் பின்னர் கெலமங்கலம் சாலைக்குக் கொண்டு வந்து சரமாரியாகஅரிவாளால்வெட்டிக் கொலை செய்து முகத்தை சிதைத்து உடலை வீசி விட்டுப் போய் விட்டனர்.
விசாரணையின் இறுதியில் குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications