தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீர் கோளாறு: தமிழகத்தில் மின் வெட்டு அதிகமானது!

தமிழகத்தில் அனல் மின் நிலையங்கள், புனல் நிலையங்கள், காற்றாலைகள், டீசல் மின்சார உற்பத்தி நிலையங்கள் மூலமாக மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர மத்திய தொகுப்பிலிருந்தும் மின்சாரம் தமிழகத்துக்கு ஒதுக்கப்படுகிறது.
தமிழகத்துக்கு ஒரு நாளைக்கு 12,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், சுமார் 4,000 மெகாவாட்டுக்கும் மேலாக தட்டுப்பாடு நிலவுவதால், தமிழகம் பல ஆண்டுகளாக கடும் மின்வெட்டுப் பிரச்சனையை சந்தித்து வருகிறது.
இடையிடேயே தமிழக மின் நிலையங்களில் கோளாறுகளும் ஏற்படுகின்றன. அப்போது மின் உற்பத்தி மேலும் குறைந்து மக்களை மேலும் வாட்டி வதைக்கிறது. கடந்த சில நாட்களாக 8,000 மெகாவாட் என்ற அளவுக்குத் தான் மின் உற்பத்தி உள்ளது. இதனால் மின்வெட்டு நேரமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3வது யூனிட்டில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மின்வெட்டு நேரமும் மேலும் அதிகரித்து வருகிறது.
தூத்துக்குடியில் அனல் மின் நிலையத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
காற்றாலைகளிலும் எதிர்பார்த்த அளவு மின்சார உற்பத்தி இல்லை. நேற்று காலை காற்றாழை மின் உற்பத்தி 20 மெகாவாட் என்ற அளவில் தான் இருந்தது.
தூத்துக்குடி அனல் மின்சார நிலையத்தில் கோளாறை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனாலும் கோளாறு சரியாக சில நாட்கள் ஆகுமாம்.
அதுவரை மின் வெட்டு நேரமும் அதிகமாகவே இருக்கும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications