திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தள்ளுபடி

நாகர்கோவில் இலவச சட்ட உதவி மற்றும் மனித உரிமை அமைப்பு நிறுவனர் கிரிநிவாசபிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கடந்த 1996ம் ஆண்டு தன்னுடைய குடும்ப சொத்து மதிப்பு 24.27 லட்சம் ரூபாயாக இருந்ததாக தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
அவர் அமைச்சராக பதவி வகித்த பின்பு சில சொத்துக்களை மனைவி பாரதி பெயரில் வாங்கியுள்ளனர். ஒரு சொத்தை பினாமி பெயரில் பதிவு செய்து, 17 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுக்கு வங்கியில் பிணையமாக கொடுத்துள்ளனர். சுரேஷ்ராஜன் 13.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 ஏக்கர் நிலத்தை மனைவி பெயரில் 2008ம் ஆண்டில் பதிவு செய்துள்ளார். வேண்டுமென்றே, சுரேஷ்ராஜனின் உண்மையான பெயரை மறைத்து என்.எஸ்.ராஜன் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடந்த 2008ம் ஆண்டு ரூ.100 கோடி மதிப்பில் என்.எஸ்.ஆர். ஸ்டீல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதற்கு கலால்வரி செலுத்தாமல் தடையில்லா சான்று வாங்கியுள்ளார். அமைச்சராக இருந்த போது சம்பளம் ரூ. 27,000, வீட்டு வாடகைப்படி ரூ. 20,000 வாங்கியவருக்கு எப்படி 500 கோடி ரூபாய்க்கு சொத்து வந்தது?
எனவே, சுரேஷ்ராஜன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். இதனால் அவர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கில் உள்துறை கூடுதல் செயலாளர் தரப்பில் சுரேஷ்ராஜன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அவர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா ஆகியோர் மனுதாரர் கூறிய புகார் மீது விசாரணை நடைபெறுகிறது. இதை இந்த நீதிமன்றம் பதிவு செய்கிறது. வழக்கில் ஏதேனும் குறைகள் இருந்தால் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளிக்கலாம். இதற்கு எந்தவித தடையும் இல்லை என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications