மீனவர்களை கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் நாடு திரும்ப அனுமதி
டெல்லி: இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் தொடர்புடைய இரண்டு இத்தாலி கடற்படை வீரர்களும், 4 வாரங்களுக்கு அவர்களின் நாட்டிற்கு சென்று வர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இருவரை சுட்டுக்கொன்றது தொடர்பான வழக்கில், இத்தலி கடற்படை ஊழியர்கள் மஸிமிலானோ லட்டோர் மற்றும் சால்வாடோர் கிரோன் ஆகியோர் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது கொல்லம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது ஜாமீனில் இருக்கும் அவர்கள் கொச்சி ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.
இத்தாலியில் தேர்தல் நடைபெறுவதால் வாக்களிக்க அனுமதி கோரி அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு, தேர்தலில் வாக்களிக்க அனுமதியளிப்பதாக கூறியுள்ளது. இத்தாலி நாட்டு சட்டப்படி தபால் மூலம் வாக்களிக்க முடியாது என்பதால் அவர்களுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் இத்தாலிக்கு மட்டும் சென்று விட்டு மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி விட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த குற்றவாளிகள் ஏற்கனவே கிருஸ்துமஸ் கொண்டாடுவதற்காக இத்தாலி சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications