காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி பிரதமருக்கு ஜெ. கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில், காவிரி நீர் தீர்ப்பாயம் கடந்த 5.2.2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பை கடந்த 19.2.2013 அன்று அரசிதழில் வெளியிட்டமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். எனது நன்றியினையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழில் அறிவிப்பாக வெளியிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என இதற்கு முன்னரே தங்களிடம் தொடர்ந்து நான் வற்புறுத்தி வந்துள்ளேன்.

தற்போது, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகியுள்ள நிலையில், இந்த தீர்ப்பு காவிரி நீர் பங்கீடு தொடர்பான அனைத்து சர்ச்சைகளையும் கட்டுப்படுத்தும். மேலும் மாநிலங்களுக்கிடையிலான நதி நீர் சர்ச்சைகள் குறித்த சட்டத்தின்படி காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியான பின்னர் அந்த உத்தரவானது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணையானதாகும்.

ஆணையத்தின் இறுதி உத்தரவில் திறந்து விடப்படும் நீரின் அளவை கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் ஒரு மேலாண்மை வாரியத்தை அமைக்கவும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை ஏற்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் மூலம் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் ஏற்படுத்துவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+