ஜெ. பிறந்த நாளை முன்னிட்டு மேலும் 24 இடங்களில் 'அம்மா மெஸ்' இன்று திறப்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை மாநகரில் இன்று மேலும் 24 அம்மா உணவகங்கள் திறக்கப்படுகின்றன.
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் ஏழை எளியோருக்கான மலிவு விலை உணவகங் திறப்பதுகுறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். சமீபத்தில் அவரே தனது கையால் 15 உணவகங்களைத் திறந்து வைத்தார். இந்த உணவகங்களுக்கு சென்னை மாநகராட்சி, அம்மா உணவகம் என்று பெயர் சூட்டியுள்ளது. ஆனால் மக்கள் செல்லமாக அம்மா மெஸ் என்றுதான் அழைக்கின்றனர்.
இந்த உணவகங்களில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் என விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து அனைத்து வார்டுகளிலும் உணவகங்களை விரைவாக திறக்க மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

திருவொற்றியூர் மண்டலம் மணலி எக்ஸ்பிரஸ் சாலை, மணலி மண்டலம் பெருமாள் கோயில் தெரு, மாதவரம் மண்டலம் நேரு நகர் சென்னை மாநகராட்சி மிடில் பள்ளி, தண்டையார்பேட்டை மண்டலம் புதிய வினோபா நகர் சமுதாய நலக்கூடம், புதிய வண்ணாரப்பேட்டை மல்டி பர்பசல் ஹால். ராயபுரம் மண்டலம் அண்ணா பிள்ளை தெரு, எழும்பூர் ரயில் நிலைய நுழைவாயில், திருவிகநகர் மண்டலம் செம்பியம் பேப்பர்ஸ்மில்ஸ் சாலை, ஓட்டேரி வள்ளுவன் தெரு, அம்பத்தூர் மண்டலம் மேனாம்பேடு மாரியம்மன் கோயில் தெரு.
அண்ணாநகர் மண்டலம் சேத்துப்பட்டு மங்களபுரம் 7வது தெரு, எம்.எம்.டி.ஏ காலனி எம்.ஜி.ஆர் 3வது தெரு.தேனாம்பேட்டை மண்டலம் ராயப்பேட்டை முத்தையா தெரு, கோடம்பாக்கம் மண்டலம் கோயம்பேடு அய்யப்பன் நகர் பிரதான சாலை, கோடம்பாக்கம் காமராஜ் காலனி பிரதான சாலை, வளசரவாக்கம் மண்டலம் நெற்குன்றம் மாதா கோயில் தெரு, ஆலந்தூர் மண்டலம் ஆலந்தூர் ராஜா தெரு முதல் சந்து, ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணபுரம் பிரதான சாலை, அடையாறு மண்டலம் அடையாறு திருவேங்கடம் தெரு.
பெசன்ட்நகர் 1வது அவின்யூ (மீன் மார்க்கெட் அருகில்). பெருங்குடி மண்டலம் எம்.ஜி.ஆர். நகர் வேளச்சேரி தரமணி சாலை, பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலை, பள்ளிக்கரணை வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலை, சோழிங்கநல்லூர் மண்டலம் காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெரு ஆகிய 24 இடங்களில் இன்று இந்த உணவகங்கள் திறக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications