இளைஞர் காங். தலைவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் ஜி.கே.வாசனின் யுவராஜ்!

இவரது நீக்கத்திற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. பெரும் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் நடந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக தேர்வானவர்தான் யுவராஜ். ராகுல் காந்தியின் நேரடி மேற்பார்வையில் நடந்த தேர்தல் இது என்பதால் தமிழக காங்கிரஸார் பெரும் பரபரப்புடன் இதைகவனித்து வந்தனர்.
தலைவர் பதவிக்கான தேர்தலின்போது வாசன் கோஷ்டிக்கும், கார்த்தி சிதம்பரம் கோஷ்டிக்கும் இடையே கடும் மோதல் இருந்தது. அதில் வென்று தலைவரானவர்தான் யுவராஜ்.
ஆனால் தலைவரான பின்னர் இவரது செயல்பாடு அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தைத் தரும் வகையிலேயே இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மூத்த தலைவர்களை மதிப்பதில்லை, தனது வேலைகளை சரியாக செய்வதில்லை என்பது உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன.
அதை விட உச்சமாக சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த இளம்பெண் ஐஸ்வர்யா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் யுவராஜின் பெயர் பலமாக அடிபட்டது. யுவராஜ் மீது பல்வேறு பரபரப்புப் புகார்கள் கிளம்பின.
இந்த நிலையில்தான் அவரை பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது கட்சி மேலிடம்.
ஈரோட்டைச் சேர்ந்தவர் யுவராஜ். தீவிர வாசன் ஆதரவாளர். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் படு தோலவி அடைந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications