ஆப்கானிஸ்தானில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு: காபூலை தாக்கும் தாலிபான்கள் சதி முறியடிப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானில் இரண்டு இடங்களில் குண்டுவெடித்ததில் அந்நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் பலியாகினர். மேலும் காபூலில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்த திட்டமிட்டிருந்த தீவரிவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள ஜலாலாபாத் நகரில் உள்ள உளவு ஏஜென்சி அலுவலகம் மீது தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை கொண்டு இன்று மோதினான். இதையடுத்து புலி ஆலம் என்ற இடத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தினான். இந்த 2 தாக்குதல்களில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் பலியாகினர்.
மேலும் தலைநகர் காபூலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது. தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் கார் நிறைய வெடிகுண்டுகளுடன் காபூலில் உள்ள முக்கிய இடத்தில் தாக்குதல் நடத்த வந்தான். ஆனால் அவனை போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டு கார் வெடிகுண்டை செயல் இழக்கச் செய்தனர்.
இந்த தாக்குதல்களை தாங்கள் தான் நடத்தியதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications