அடடடடடடடே, கன்னுக்குட்டி நெத்தியில் அம்மா பெயர் இருக்கப்பா...!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரு பசு மாடு கன்றுக் குட்டி போட்டது. அந்த கன்றுக் குட்டியின் நெற்றியில் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் வரும் முதல் எழுத்தான ஜே என்று இடம் பெற்றிருக்கிறது. அதுவும் ஜெயலலிதா பிறந்தநாளன்று இந்த கன்றுக்குட்டி பிறந்ததால் அதிமுகவினர் தெய்வீகப் பரவசத்துடன் கன்றுக்குடியை தரிசித்து வணங்கி்ச செல்கின்றனர்.
சுப்பன் செட்டியார் வளர்த்து வரும் பசு மாடுதான் இந்த வித்தியாசமான கன்றுக்குடியைப் போட்டுள்ளது. சுப்பன் செட்டியாரும், அவரது மனைவி மாரியம்மாளும், ஸ்ரீவில்லிபுத்தூர் குலாளர் தெருவில் வசித்து வருகின்றனர்.
அவரது பசு மாடு சினை பிடித்திருந்தது. இந்த நிலையில், அந்தப் பசு முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி கன்றுக்குட்டியை ஈன்றது. அதைப் பார்த்த சுப்பன் செட்டியாருக்கு பெரிய ஆச்சரியம்.
ஏன் என்றால் கன்றுக்குட்டியின் நெற்றியில் ஜே என்ற ஆங்கில எழுத்து போல வெள்ளை நிறத்தில் குறி இருந்ததுதான். இந்தத் தகவல் வெளியில் பரவவே அதிமுகவினர் திரண்டு வந்தனர். அடடடா, அம்மாவோட இன்ஷியலைப் பாருங்கப்பா என்று பரவசத்துடன் கன்றுக்குட்டிக்கு மாலையிட்டு வணங்கிச் சென்றனர். சுப்பன் செட்டியாரும் பொங்கல் வைத்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார்.
தற்போது அந்த வித்தியாசமான கன்றுக்குட்டியை அதிமுகவினர் தொடர்ந்து திரண்டு வந்து பார்த்தவண்ணம் உள்ளனர்.
ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்கு...!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications