8வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்!: கோகுல இந்திரா, சிவபதி, விஜய்க்கு 'கல்தா'!

Subscribe to Oneindia Tamil

Jayalalithaa sacks 3 ministers; 8th cabinet change
சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து கோகுல இந்திரா, என்.ஆர். சிவபதி மற்றும் டாக்டர் விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக வைகைச் செல்வன், கேசி வீரமணி, பூனாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். புதிய அமைச்சர்கள் மூவரும் நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்கின்றனர்.

இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில். சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திரா, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜய் மற்றும் பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த சிவபதி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. வைகைச் செல்வன், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. கேசி வீரமணி மற்றும் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. டிபி பூனாட்சி ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் மூவரும் நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்கின்றனர்.

வைகைச் செல்வனுக்கு பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டு துறையும், கேசி வீரமணிக்கு சுகாதாரத் துறையும், டிபி பூனாட்சிக்கு கதர் கிராமத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கேபி முனுசாமிக்கு கூடுதலாக சட்டத்துறையும், கதர் கிராமத் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியனுக்கு சுற்றுலாத் துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி பறிக்கப்பட்ட கோகுல இந்திரா சென்னை அண்ணா நகரில் இருந்தும், சிவபதி முசிறி தொகுதியில் இருந்தும், டாக்டர் விஜய் வேலூரில் இருந்தும் சட்டசபைக்கும் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இதுவரை 15 அமைச்சர்கள் டிஸ்மிஸ்!:

தமிழக அமைச்சரவை தற்போது 8வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி அதிமுக அரசு பொறுப்பேற்றது. ஜுன் மாதம் 27ம் தேதி தமிழக அமைச்சரவை முதல்முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.

மேலும் தற்போது நீக்கப்பட்ட 3 அமைச்சர்களுடன் மொத்தம் 15 பேர் இதுவரை ஜெயலலிதாவின் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே சட்டத் துறை அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து சி.சண்முகவேலு, எஸ்.பி.சண்முகநாதன், புத்தி சந்திரன், எஸ்.பி.வேலுமணி, செந்தமிழன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.பி.உதயகுமார், எம்.பரஞ்ஜோதி, செல்வி ராமஜெயம், கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம் என அமைச்சர்களாக இருந்தவர்கள் நீக்கப்பட்டனர். தற்போது இந்தப் பட்டியலில் கோகுல இந்திரா, சிவபதி, விஜய் ஆகியோரும் இணைந்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+