ரயில்வே பட்ஜெட் தமிழகத்திற்கு மகிழ்ச்சியும், ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசின் இந்த ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுமோ என்ற அச்சத்தோடு எதிர்பார்த்திருந்த நிலையில், பயணிகள் கட்டணம் உயர்வில்லை என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கின்றது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 14 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நான்கு புதிய வழித்தடங்கள் தொடங்கப்பட உள்ளன. ஆறு புதிய வழித்தடங்களுக்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் இந்த நிதியாண்டிற்குள் நடைமுறைக்குக் கொண்டு வரத்தக்க வகையில் தேவையான நிதியினை ரயில்வே அமைச்சகம் ஒதுக்கிட வேண்டும்.
சென்ற ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தமிழகத்திற்கான புதிய ரயில்கள் இன்னும் இயக்கப்படாமல் இருப்பது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. சரக்கு கட்டணம் 5.8 சதவிகிதம் அதிகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. வியாபாரிகளையும், தொழில் செய்வோரையும் அது பெரிதும் பாதிக்கும்.
அதுபோலவே முன்பதிவு, தட்கல் கட்டணம் அதிகரிக்கப்படவிருப்பதும் மக்களைப் பாதிக்கும். இந்த நிதியாண்டில் ஒரு லட்சத்து ஐம்பத்திரண்டாயிரம் காலி பணி இடங்களை நிரப்ப முடிவு செய்திருப்பதாக அறிவித்திருப்பதும், பணியிடங்களை நிரப்புவதில் பத்து சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படுமென்று அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கவை.
தாம்பரத்திலும், ராயபுரத்திலும் முனையங்கள் அமைக்கப்படுமென்று ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டும் அந்த அறிவிப்பினை நிறைவேற்றக்கூடிய வகையில் நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யாததால் அந்த அறிவிப்பு அப்படியே கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது.
செங்கல்பட்டுக்கும் திருச்சிக்கும் இடையே இரட்டைப் பாதை அமைக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் தராததும் மின்மயமாக்கலில் தமிழகம் பெருமளவுக்குப் புறக்கணிக்கப்பட்டிருப்பதும் ஏமாற்றம் அளிக்கிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஒவ்வொரு முறையும் அறிவிக்கப்படுவதும், அவை நிறைவேற்றப்படாததும் மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது.
மொத்தத்தில் இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் தமிழகத்தைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் கலந்து தருகின்ற பட்ஜெட் என்றே கூற வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications