பொட்டு சுரேஷ் கொலை: மு.க.அழகிரி தரப்பை பிளாக் மெயில் செய்யும் ‘அட்டாக்’ கும்பல்?!

பொட்டு சுரேஷ் கொலைக்கு முன்னதாக சென்னை பாண்டிபஜார் ஹோட்டலில் அட்டாக் பாண்டி- அழகிரி சந்திப்பு நடந்ததாகவும், அப்போது பொட்டுவினால் தொந்தரவு... குடும்பத்துக்குள் பிரச்சனை என்று அழகிரி சொன்னதாகவும், அதை அட்டாக் வந்து தன்னிடம் கூறியதாகவும் போலீசில் தெரிவித்துள்ளான் இந்தக் கொலையில் கைதாகியுள்ள அட்டாக்கின் அக்காள் மகளான விஜயபாண்டி.
நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே செய்றேன் என்று அழகிரியிடம் கூறிவிட்டு வந்த அட்டாக், அப்போதே, ஆள் ரெடி பண்ணுங்க என்று தன்னிடம் கூறி, கொலைக்கான ஸ்கெட் போட்டதாக கூறியுள்ளான் விஜயபாண்டி.
அழகிரி, துரை பெயர் லீக்....:
கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு சரணடைந்ததும், அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் அட்டாக் பாண்டியின் 'ட்ரெயினிங்' என்கின்றனர். மு.க.அழகிரி, துரை. தயாநிதியின் பெயரை போலீசிடம் சொல்லலாம் என்று அட்டாக்கிடம் இருந்து தகவல் வந்த பிறகே அவர்கள் போலீசில் இவர்களது பெயரை கூறியிருக்கின்றனர்.
இது அழகிரியை பிளாக் மெயில் செய்யும் முயற்சி என்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள்.
அட்டாக் கேட்ட சத்தியங்கள்
திமுகவில் ஏதாவது ஒரு பதவி, இரண்டு கோடி ரூபாய் பணம், பொட்டு சுரேஷ்க்கு நீங்கள் முக்கியத்துவம் தரக் கூடாது, மதுரை உயர் நீதிமன்றம் எதிரில் இருக்கும் 100 சென்ட் இடப் பிரச்சனையில் நான் தலையிட்டேன். அந்த நேரத்தில் எனக்கு எதிராகப் பஞ்சாயத்து செய்து அந்த லாட்டரி அதிபருக்கு சாதகமாகச் செய்து விட்டனர். அதில் 50 சென்ட் நிலமாவது எனக்கு வாங்கித் தர வேண்டும் என்று 4 முக்கிய நிபந்தனைகளை பாண்டிபஜார் ஹோட்டல் சந்திப்பின் அழகிரியிடம் அட்டாக் விதித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு அழகிரி மறுத்துவிட்டதாகவும், ஜனவரி 31ம் தேதி பொட்டு போட்டுத் தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளான் விஜயபாண்டி.
'காட்டுவாசி' முருகனுடன்:
பொட்டு கொலை வழக்கு அழகிரி, துரை தயாநிதியை மையமாக வைத்து வலம் வர ஆரம்பித்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அட்டாக் பாண்டியை எப்படி வெளியே கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளது மதுரை போலீஸ்.
அட்டாக் பாண்டியுடன் இப்போது 'காட்டுவாசி' முருகன், வில்வதுரை, பிரவீண் ஆகியோர் இருப்பதாக கூறுகின்றனர். அட்டாக் சொத்துக்களின் கை வைத்தால் வெளியே வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவற்றை அடையாளம் கண்டதோடு, பத்திரப் பதிவு அதிகாரிகள் உதவியுடன் சேகரித்து ஆட்சி மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர்.
சொத்துக்கள் மீது கை வைக்க ஆரம்பித்தால் அட்டாக் தானாகவே வெளியே வருவார் என்பது போலீசின் கணிப்பு. அட்டாக் வந்தால் அவர் கொடுக்கும் வாக்குமூலம் எப்படி இருக்கப் போகிறதோ?!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications