என்னது ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழாவா?: போர்க்கொடி தூக்கிய விவசாயிகள்!
தஞ்சாவூர்: காவிரி நீர் கிடைக்காததால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் முதலில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழி்ல் வெளியிட வைத்தற்காக தமிழக முதல்வர் ஜெயலலலிதாவுக்கு மார்ச் 7-ந் தேதி தஞ்சாவூரில் பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இதற்காக ஒரு விவசாயிகள் குழுவும் முதல்வரை நேரில் சந்தித்துப் பேசியது.
ஆனால் அமைச்சர் வைத்திலிங்கம், ஜெயலலிதாவிடம் பாராட்டு பெறுவதற்காக இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார். முதல்வரை சந்தித்தவர்களில் ஒருசிலர்தான் விவசாய சங்கப் பிரதிநிதிகள் என்கின்றனர் விவசாயிகள்.
இப்படி விவசாயிகள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது திரண்டு எழுந்த விவசாயிகள், வேண்டும் வேண்டும் உரிய நிவாரணம் வேண்டும்! வேண்டாம்... வேண்டாம்... பாராட்டு விழா வேண்டாம்! என்று விண்ணதிர முழக்கமிட்டு குறைதீர்க்கும் கூட்டத்தைப் புறக்கணித்து தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்
இதைப் பற்றி கருத்து தெரிவித்த விவசாயிகள், ''அமைச்சர் வைத்திலிங்கம்தான் இதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கார். காவிரி டெல்டாவே கிட்டத்தட்ட சாவு வீடு கணக்கா கிடக்கு. தீர்ப்பு அரசிதழ்ல ஏறியும் எங்களுக்கு எந்தப் புண்ணியமும் இல்ல. சொட்டு தண்ணி கூட வரல. விவசாயிங்கள்லாம் நொந்து போயிருக்காங்க. இந்த நேரத்துல நிவாரணம் கொடுக்கற வேலையை மட்டும் செய்தாபோதும். தேவையில்லாம பாராடடுவிழாவெல்லாம் நடத்தி, அவங்களோட ரணத்தைக் கிளறி பார்க்க வேணாம்னு சொன்னோம். ஆனா, கேக்கல. தனக்கு வேண்டப்பட்ட சில சங்க தலைவர்களைக் கூட்டிட்டு போய், முதல்வர்கிட்ட நல்ல பேர் வாங்கறதுக்காக இப்படி பண்ணியிருக்கார் அமைச்சர். அதனாலதான் இப்ப எதிர்ப்பு தெரிவிச்சு போராடிட்டு இருக்கோம்.
நிவாரணம் கொடுக்கற வேலைகளே ஒழுங்கா நடக்கல. இதுக்காக அங்கங்க போராடிகிட்டே இருக்காங்க விவசாயிங்க. இப்படி வாடிக்கிடக்கற விவசாயிகளை தேத்தி, அடுத்த வருஷம் பயிர் பண்ணலாம்னு நம்பிக்கை ஊட்டற வேலைகளை செய்றதவிட்டுட்டு, ரோம் பத்தி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசிச்ச கதையா, விழாவெல்லாம் நடத்தறது எந்தவிதத்துல நியாயம்? என்று சீறுகின்றனர்.
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுவான விவசாயிகள் பெரும்பாலானவர்களே இதில் பங்கேற்றிருக்க... செய்வதறியாது தவித்துப் போனார் மாவட்ட ஆட்சித்தலைவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications