போர்க்குற்றம்: வங்கதேச இஸ்லாமிய கட்சியின் துணைத் தலைவருக்கு தூக்கு
டாக்கா: வங்கதேச விடுதலைப் போரின் போது போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்காக அந்நாட்டின் ஜமாத் ஈ இஸ்லாமி என்ற கட்சியின் துணைத் தலைவரான டெல்வார் ஹூசைனுக்கு (வயது 73) துக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அந்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தில் சுமார் 35 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
1971-ம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்றது. இதை எதிர்த்தது ஜமாத் கட்சி. இதனால் வன்முறை மற்றும் மனிதப் படுகொலைகளில் இக்கட்சி ஈடுபட்டது. இதற்காக அக்கட்சியின் துணைத் தலைவர் டெல்வார் ஹூசைன் மீது போர்க் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக வழக்கில் டெல்வார் ஹூசைனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தூக்குத் தண்டனையை எதிர்த்து ஜமாத் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் நடத்தினர். இதில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையேயான மோதலில் சுமார் 35 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்தும் வங்கதேசத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications