ஆ.ராசாவை முன்வைத்து வரிந்து கட்டும் திமுக- எதிர்க்கும் காங்.- ஆதரிக்கும் பாஜக, இடதுசாரிகள்!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு (ஜேபிசி) முன்பு தாம் சாட்சியமளிக்க வேண்டும் என்று முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா விடுத்திருக்கும் கோரிக்கை அரசியல் பூகம்பமாக வெடிக்கக் காத்திருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் சிக்கி சிறைக்குப் போய் தற்போது ஜாமீனில் இருக்கிறார் ஆ.ராசா. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் பற்றி அனைத்துக் கட்சி எம்.பிக்கள் இடம் பெற்றிருக்கக் கூடிய ஜேபிசி எனும் பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணையும் நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் போது அண்மையில் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி ஆஜராகி ஆ.ராசா மீது புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தாம் விளக்க அளிக்க தம்மையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் ஆ.ராசா. ஆனால் அவரை அழைக்க மறுத்துவருகிறது ஜேபிசி.
தம்மை ஜேபிசி முன்பு சாட்சியமளிக்க அழைக்காவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஆ.ராசா மிரட்டலும் விடுத்துள்ளார். இதே ஜேபிசியில் இடம் பெற்றுள்ள டி.ஆர் . பாலுவும் திருச்சி சிவாவும் எப்படியாவது ஆ.ராசாவை சாட்சியம் அளிக்க அழைக்க வைத்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகின்றனர். இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி திமுகவின் கோரிக்கையை கறாராக நிராகரித்துவிட்டது. ஆ. ராசா தம்மை நியாயப்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்துவார் என்கிறது காங்கிரஸ். இதனால் திமுக கடும் கோபத்தில் இருக்கிறது.
மேலும் ஆ.ராசாவைப் பொறுத்தவரையில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்று தாம் எடுத்த நிலைப்பாடு பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களுக்குமே தெரிவிக்கப்பட்டது. ஆனால் தம்மை மட்டுமே குற்றம்சாட்டுகின்றனர் என்று கூறி வருகிறார். இதனால் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் வழக்கில் ஆ. ராசா சிக்க வைத்துவிடுவார் என்பதாலேயே காங்கிரஸ் தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இடதுசாரிகளும் பாரதிய ஜனதா கட்சியும் திமுகவின் நிலைக்கு முழுமையான ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதுபற்றி கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி. சீத்தாரம் யெச்சூரி, ஆ.ராசாவை அழைப்பதன் மூலம் உண்மை தெரியவரும் என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications