யுவராஜா நீக்கம் எதிரொலி: ஆதரவாளர்களுடன் ஜி.கே.வாசன் அவரச ஆலோசனை

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவி ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதற்கு யுவராஜாதான் காரணம் என்று செய்தி பரவியதை அடுத்து அவர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு யுவராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவர் மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளர். இதனையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே யுவராஜா மீதான குற்றச்சாட்டைக் கூறி அவரை பதவியில் ராஜினாமா செய்யச் சொல்லும்படி காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் வாசனிடம் கூறியுள்ளனர். ஆனால் ஆதாரம் இன்றி யுவராஜாவை ராஜினாமா செய்யச் சொல்ல முடியாது என்று வாசன் கூறிவிட்டார்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் யுவராஜா திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது ஜி.கே. வாசனையும் அவரது ஆதரவாளர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
காங்கிரஸ் தலைமையின் மீதும் வாசன் அதிருப்தியில் இருந்தார், அதன் வெளிப்பாடாகவே ராஜபக்சே இந்திய வருகையை தவிர்த்து இருக்கவேண்டும் என்றும், ஆசிய தடகளப் போட்டியை தமிழ்நாட்டில் நடத்தமாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா சொன்னதை வரவேற்கிறேன் என்றும் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதனிடையே இன்று காலை முதல் சென்னையில் உள்ள வாசனில் இல்லத்தில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் யுவராஜா நீக்கம் பற்றி பேசியதாக தெரிகிறது. இதற்கு காரணம் நிதி அமைச்சர் பா. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம்தான் என்று குற்றம் சாட்டினர்.
யுவாராஜா நீக்கத்தை வைத்து வாசன் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி தரலாம் என்றும் கூறப்படுகிறது.இது குறித்து வாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தற்போது நான் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். மத்தியில் அமைச்சராக இருக்கிறேன். அன்னை சோனியாவின் வழிகாட்டுதல் படிதான் நடந்து கொண்டிருக்கிறேன் என்று பட்டும் படாமல் பதில் சொல்லியிருக்கிறார். எப்பொழுதுமே இது போன்ற கேள்விக்கு மவுனம் சாதிக்கும் ஜி.கே. வாசன், தற்போது இது போன்று பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications