பாரில் மூக்குமுட்ட குடித்துவிட்டு ஆபாச பாடல் பாடி தகராறு செய்த 4 எஸ்.ஐ.க்கள்
கோட்டயம்: பாரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பிறரிடம் தகராறு செய்த உதவி எஸ்.ஐ.க்கள் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உதவி எஸ்.ஐ.ஆக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு பிரிவு உபச்சார விழா நடந்தது. அதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். அப்போது விருந்துடன் மதுவும் பரிமாறப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட 4 உதவி எஸ்.ஐ.க்கள் நன்கு மது அருந்திவிட்டு அது போதவில்லை என்று அருகில் உள்ள பாருக்கு சென்று மூக்குமுட்ட மது அருந்தினர்.
போதை தலைக்கு ஏறிய பிறகு அவர்கள் நடக்கக் கூட முடியாமல் இருந்தனர். அப்போது அவர்கள் பாருக்கு வந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதைப் பார்த்த பார் ஊழியர்கள் அந்த 4 பேரையும் அழைத்துச் சென்று வெளியே விட்டுவிட்டு வந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர்கள் மீண்டும் பாருக்குள் வந்து ஆபாசப் பாடல்களைப் பாடி பிறரை வம்புக்கு இழுத்தனர். பாரில் தகராறு செய்யும் 4 பேரும் போலீசார் என்பதை தெரிந்து கொண்ட ஊழியர்கள் இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் பாருக்கு வந்து அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். இதற்கிடையே அந்த 4 பேரும் நைசாக பாரின் பின்புறமாக வெளியேறினர். அவர்கள் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications