நோபல் பரிசு! திருமாவளவன் அப்படி சொன்னதுமே எனக்கு தூக்கி வாரி போட்டது! மீண்டும் வைகோ அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: திமுகவும் தவெகவும் ஓரணியில் சேர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சொன்னது எனக்கு வாரி போட்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திமுகவும் தவெகவும் ஓரணியில் சேர வேண்டும் என திருமாவளவன் தெரிவித்திருந்ததை கேட்டு எனக்கு தூக்கி வாரிப் போட்டது. வடதுருவமும் தென் துருவமும் இணைய முடியுமா?

Vaiko criticises Thirumavalavan

தவெக அமைச்சரவையில் இருந்து கொண்டு திமுகவுடன் நட்பா என்றும் வைகோ கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் திருமாவளவனுக்கு நோபல் பரிசு என கூறியது அவரது மனதை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமாவளவனை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அந்த வார்த்தையை திரும்ப பெற்றுக் கொல்கிறேன். திருமாவளவன் மீது எனக்கு கோபமோ, மன கசப்போ இல்லை. அவரது வளர்ச்சிக்கு நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன்.

திருமாவளவன் பற்றிய எனது கருத்தால் விசிக எம்பி ரவிக்குமார் எனது சங்கொலி பத்திரிகை நிகழ்ச்சிக்கு வர முடியாது, டெல்லியில் வேலை இருப்பதாக சொல்லிவிட்டார் என்றும் வைகோ தெரிவித்திருந்தார்.

நேற்று முன் தினம் வைகோ தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், முதல்வர் விஜய் கரூர் போகக் கூடாது , பேசக் கூடாது என உச்சநீதிமன்றத்திற்கு திமுக சென்றது. ஆனால் கோர்ட் சாட்டையடி கொடுத்துள்ளது. தவெக கூட்டணியில் இருந்தாலும் திமுகவுடன் கூட்டணியிலும் நட்பிலும் தொடர்கிறோம் என திருமாவளவன் கூறியதற்கு அவருக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்றார்.

இந்த நிலையில் அரியலூரில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்த போது வைகோவின் நோபல் பரிசு குறித்த கேள்விக்கு அவர் கூறுகையில், "நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தமைக்கு நன்றி. பரிசு கிடைத்தாலும் அவருக்கு நன்றி" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் திருமாவளவன் குறித்து தான் பேசிய கருத்தை வைகோ வாபஸ் பெற்றுள்ளார். அவர் கூறுகையில் விசிக தலைவர் திருமாவளவனை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. எனக்கு அவர் மீது இம்மியளவு கூட கோபமோ வருத்தமோ இல்லை. திருமாவளவன் நல்ல தலைவர் என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+