"30 நிமிடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்".. செட்டிங்கா? - சர்ச்சைக்குள்ளான ஊரக வளர்ச்சித்துறை டெண்டர்
சென்னை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் ஒரு டெண்டர் அறிவிப்பில், டெண்டரை சமர்ப்பிக்க 30 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பணிக்கான ஒப்பந்த விண்ணப்பம் வரும் 13 ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி 3.30 மணிக்கு முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நபருக்கு டெண்டர் வழங்கவே, இப்படி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புஸ்ஸி ஆனந்த் பொறுப்பில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் செட்டிங் டெண்டர் செய்யப்படுகிறதா என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் புதிய திட்டங்களுக்கான டெண்டர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் வெறும் 30 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications