டிரம்புக்கு சாவு பயத்தை காட்டிய ஈரான்.. திடீரென விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்.. திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

அங்காரா: அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் தான் ஈரானால் தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்ற அச்சத்தில் டொனால்ட் டிரம்ப் திடீரென்று தனது விமானத்தை மாற்றினார். ஈரானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் துருக்கியில் இருந்து அமெரிக்காவிற்கு டிரம்ப் புறப்பட்டபோது கடைசி நிமிடத்தில் இந்த விமான மாற்றம் நடந்த நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

'நேட்டோ' அமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு துருக்கி நாட்டில் 2 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த உச்சி மாநாடு நேற்று வரை நடந்தது.

donald-trump-uses-his-old-air-force-one-plane-instead-of-qatar-gifted-flight-to-leave-turkey

இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்க செல்லும்போது தனது விமானத்தை மாற்றினார்.

அமெரிக்க அதிபர்கள் பயணிக்கும் விமானங்கள் 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' என்று அழைக்கப்படும். கடந்த 30 ஆண்டுகளாக இந்த விமானத்தில் தான் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த விமானத்தில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளன. தாக்க வரும் ஏவுகணை, ட்ரோன் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கண்டுபிடிப்பது, வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி, டிரம்ப் அவசர மீட்டிங் நடத்தும் வசதி என பல வசதிகள் உள்ளன. இதனால் வெளிநாட்டு பயணங்களில் இந்த விமானத்தை தான் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு டொனால்ட் டிரம்ப்பும் விதிவிலக்கல்ல.

ஆனால் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் கத்தார், டொனால்ட் டிரம்புக்கு புதிய விமானத்தை பரிசளித்தது. சிவப்பு, வெள்ளை, நேவி ப்ளூ வண்ணத்தில் வழங்கப்பட்ட இந்த விமானத்தின்மொத்தம் மதிப்பு 400 மில்லியன் அமெரிக்க டாலராகும். இது போயிங் 747-8 ரக விமானமாகும். இந்த விமானம் டிரம்ப் பயன்படுத்துவதால் புதிய 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த விமானத்தை முதல் முதலாக டிரம்ப் பயன்படுத்த விரும்பினார். அதன்படி துருக்கிக்கு இந்த புதிய விமானத்தில் டிரம்ப் பயன்படுத்தினார். அதன்பிறகு 'நேட்டடோ' தலைவர்களின் உச்சி மாநாட்டை முடித்த டிரம்ப் மீண்டும் கத்தார் வழங்கிய புதிய 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தில் தான் அமெரிக்கா திரும்புவதாக இருந்தது. ஆனால் திடீரென்று டொனால்ட் டிரம்ப் இந்த விமானத்தை ரத்து செய்தார்.

அதற்கு பதில் டொனால்ட் டிரம்ப் 'தனது பழைய 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தில் ஏரி பயணித்தார். டொனால்ட் டிரம்ப்பின் இந்த திடீர் விமான மாற்றத்தின் பின்னணியில் உயிர் பயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் துருக்கியும், ஈரானும் அண்டை நாடுகள். இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றனர். தற்போது ஈரான் உடன் அமெரிக்காவுக்கு நேரடியாக மோதல் உள்ளது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி நேற்று முன்தினம் தான் ஈரானின் 80 இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்கியது.

இப்படியான சூழலில் ஈரான் நினைத்தால் தனது ஏவுகணை மற்றும் நவீன ட்ரோன்களை வைத்து துருக்கியில் உள்ள டொனால்ட் டிரம்பின் விமானத்தை தாக்க முடியும். மேலும் தற்போது கத்தார் பரிசாக வழங்கிய புதிய 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. ஏவுகணை மற்றும் நவீன ட்ரோன்களை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பத்தில் குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஈரானால் தனக்கு பிரச்சனை ஏற்படும் என்று டிரம்ப் அமெரிக்க அதிபர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தும் பழைய 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தை பயன்படுத்தி அமெரிக்கா புறப்பட்டார்.

இதுபற்றி டொனால்ட் டிரம்ப்பிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். இதுதொடர்பாக அவர், ''இந்த திடீர் விமான மாற்றத்தின் பின்னணியில் கொலை மிரட்டல் , அச்சுறுத்தல் ஏதேனும் இருந்ததா?'' என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு டிரம்ப், ''ஈரானின் கொலை பட்டியலில் நான் தான் முதல் இடத்தில் இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+