ஜெயலலிதா பிறந்தநாள் விளம்பர விவகாரம்: அமைச்சர் வைகைச் செல்வன் மீது அவதூறு வழக்கு

இந்து முன்னனி மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் நெல்லை குற்றவியல் 4வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த 27-2-2013 அன்று வெளிவந்த ஒரு வார இதழில் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து வந்த விளம்பரத்தில் பாரத மாதாவின் முகத்தில் ஜெயலலிதாவின் முகத்தையும், காவிக்கொடிக்கு பதில் அதிமுக கொடியையும் வைத்து சித்தரித்துள்ளனர். அந்த விளம்பரம் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் அமைச்சர் வைகைச் செல்வன் மற்றும் தென்சென்னை வடக்கு மாவட்ட பாசறை துணை தலைவர் விஜய் ஆகியோர் சார்பில் வெளியிடப்பட்டது.
பாரத மாதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவருக்கு இணையாக ஜெயலலிதாவை ஒப்பிட்டு விளம்பரம் செய்திருப்பது எங்களின் மத உணர்வை புண்படுத்துவடன் எங்களுக்கு சமுதாயத்தில் அவமதிப்பும், நற்பெயருக்கு களங்களும் ஏற்பட்டுள்ளது. எனவே 295ஏ மற்றும் 500 ஐபிசி பிரிவுகளின் கீழ் அமைச்சர் வைகைச் செல்வன், விஜய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு மாஜிஸ்திரேட் பால்பாண்டியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர் வழக்கை வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications