மூளைச்சாவடைந்த சேலம் வாலிபரின் உடலுறுப்புகளால் உயிர் வாழும் 3 பேர்
சென்னை: சாலை விபத்தில் தலையில் காயம்பட்டு மூளைச் சாவு ஏற்பட்ட சேலம் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
சேலத்தைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம்(27). அவர் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றபோது விபத்தில் சிக்கினார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு கடந்த 1ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு முளைச் சாவு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். பின்னர் வைத்தியலிங்கத்தின் சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள், இதய வால்வுகள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேருக்கு அவரின் 2 சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை பொருத்தப்பட்டு அவர்கள் தற்போது நலமாக உள்ளனர். வைத்தியலிங்கத்தின் கண்கள் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டன. இதய வால்வுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications