மகனின் அமைச்சர் பதவிக்கு ஆப்பு வைக்க ‘கள்ளக் காதலை’ கசியவிட்ட தந்தை! கேரளாவில் பரபரப்பு!!
திருவனந்தபுரம்: கேரள மாநில அரசியலில் பாலியல் ரீதியான சர்ச்சைகள் ஓய்ந்துவிடாது போல்.. இப்போது அமைச்சர் கிருஷ்ணகுமாரின் பதவிக்கு ‘கள்ளக் காதல்' விவகாரம் வேட்டு வைக்க இருக்கிறது.. இதில் வேடிக்கை என்னவெனில் கிருஷ்ணகுமாரின் பதவியை பறிக்க கள்ளக் காதல் விவகாரத்தை கிளப்பிவிட்டவர் அவரது தந்தைதான்!
கேரள மாநில காங்கிரஸ் பி என்ற கட்சியின் தலைவர் பாலகிருஷ்ணபிள்ளை. இடமலையார் நீர் மின் திட்ட ஊழலில் சிக்கியவர். இதனால் கடந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக மகன் கிருஷ்ணகுமாரை நிறுத்தி அமைச்சர் பதவியும் வாங்கிக் கொடுத்தார். பின்னர் அப்பா பாலகிருஷ்ணபிள்ளைக்கும் மகன் அமைச்சர் கிருஷ்ணகுமாருக்கும் இடையே முட்டல் மோதல் வெடித்தது. கிருஷ்ணகுமரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணபிள்ளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கேரள பத்திரிகைகளில் ஒரு பரபரப்பான செய்தி வெளியானது. அதில் கேரள அமைச்சர் ஒருவரை அவரது கள்ளக் காதலியின் கணவன் நள்ளிரவு நேரத்தில் நையப்புடைத்துவிட்டார் என்பதுதான். ஆனால் அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு செய்தி வெளியாகவில்லை. இதனால் அவரா? இவரா? என்ற ‘விரிவான' அலசல் நடந்து கொண்டிருந்தது.
இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அரசு கொறாடா ஜார்ஜ், பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பவர் அமைச்சர் கணேஷ்குமார். பத்திரிகையில் எந்த அமைச்சர் என்று குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டுள்ளனர். இதனால் அமைச்சர்கள் அனைவர் மீதும் சந்தேக நிழல்படியும். இதனால்தான் உண்மையை சொன்னேன். அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
ஆனால் இதை நிராகரித்திருக்கும் கணேஷ்குமார், ஜார்ஜ் சொல்வது அப்பட்டமான பொய். அவர் மீது வழக்கு போடப்படும் என்றார்.
கொறாடா ஜார்ஜ், கணேஷ்குமாரின் தந்தை பாலகிருஷ்ணபிள்ளையின் மிக நெருங்கிய நண்பர் என்பதால் மகன் சம்பந்தப்பட்ட கள்ளக் காதல் விவகாரத்தை அவரே கிளப்பிவிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.!
என்ன அரசியலோ? என்ன குடும்பமோ?
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications