பொட்டு சுரேஷ் கொலை : விசாரணை வளையத்தில் ரஜினி மன்ற நிர்வாகி, திமுக மா.செ தளபதி

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் நண்பருமான பொட்டு சுரேஷ் ஜனவரி 31ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திமுக பிரமுகர்களிடமும், பொட்டு சுரேஷ் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பாக அட்டாக் பாண்டி மீது சந்தேகப்படும் போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். சரணடைந்த 9 பேரிடமும், கைதான 5 பேரிடமும் பல முறை விசாரணை செய்தும் அட்டாக் பாண்டியை விட்டு வழக்கு நகருவதாக இல்லை.
இந்த நிலையில் பொட்டு சுரேசின் நட்பு வளையத்தில் இருந்த மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர் பாலதம்புராஜ், சினிமா தியேட்டர் அதிபர் கல்யாணி, ரஜினி மன்ற சேகர் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தளபதியிடம் விசாரணை
பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டு 34 நாட்கள் ஆன நிலையில் இக்கொலை சம்பந்தமாக அட்டாக் பாண்டியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் திமுக பிரமுகர்களிடம் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்ட திமுக செயலாளர் தளபதி யை சுப்பிரமணியபுரம் போலீசார் அழைத்து விசாரித்து வருகின்றனர்.
திமுக முக்கிய பிரமுகர்களான பி.எம். மன்னன், எஸ்ஸார் கோபி ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்திய போலீசார் மீண்டும் அவர்களிடம் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முதலில் சரணடைந்த 7 பேர் கூறியதன் அடிப்படையில் மேலும் இருவர் சரணடைந்தனர். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இனி இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அட்டாக் பாண்டி சரணடைந்தால் மட்டுமே உண்மை கொலையாளிகள் பற்றி போலீசாருக்கு துப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுவரை இந்த கொலை வழக்கு வேறு பக்கம் நகர வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications