ஜெய்ஹிந்த்..தம்பி ரெண்டு சப்பாத்தி போடுப்பா...!
சென்னை: பீகாரைச் சேர்ந்த கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள், தங்களது சமையல் திறமையால் சென்னையைக் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் இங்கு முகாமிட்டிருப்பது முக்கியமாக சென்னையில் தங்கி வேலை பார்த்து வரும் வட இந்திய சாப்டவேர் என்ஜீனியர்கள், மாணவர்களைக் குறி வைத்துத்தான்.
ஆனால் தற்போது சென்னைக்காரர்களும் கூட இவர்களின் கஸ்டமர்களாகி விட்டனர். காரணம், இவர்களது சுவையான சாப்பாடுதான்.

250க்கும் மேற்பட்டோர்
கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட பீகார் சமையல்காரர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனராம். இவர்கள் பல்வேறு பகுதிகளில் குழுவாக தங்கியுள்ளனர்.

வீடுகளுக்கு டோர்டெலிவரி
இவர்கள் முதலில் வாடிக்கையாளர்களைப் பிடிக்கின்றனர். பின்னர் வாடிக்கையாளர்களின் இருப்பிடம் போய் சாப்பாட்டை கொடுக்கின்றனர். எல்லாமே டோர் டெலிவரிதான்.

வட இந்திய கஸ்டமர்கள்
வட இந்திய மாணவ, மாணவியர்,சாப்டவேர் என்ஜீனியர்கள்தான் இவர்களின் முக்கியமான வாடிக்கையாளர்கள் ஆவர்.

சப்பாத்தி - விதம் விதமான சாப்பாடு
இவர்கள் சப்பாத்தி உள்ளிட்ட விதம் விதமான சாப்பாடு வகைகளை சமைத்துக் கொடுக்கின்றனர். சும்மா சொல்லக் கூடாது, நல்ல டேஸ்ட்டாகவே இருக்கிறது சாப்பாடு.

தாம்பரம்.. வேளச்சேரி.. கேளம்பாக்கம்..
இந்த பீகாரிகள் ஐடி ஹப் எனப்படும் வேளச்சேரி, கேளம்பாக்கம், கொட்டிவாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலை, தாம்பரம், கிழக்குத் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு சமைக்கிறார்கள்.

மனீஷ் என்கிற கார்கில்
21 வயதான மனீஷ் என்கிற கார்கில் பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்தவர். கார்கில் போரின்போது வேலைதேடி சென்னை வந்தார்.இதனால் அவருக்கு கார்கில் என்ற செல்லப் பெயராம். இவர் கூரியர் கம்பெனியில் முதலில் வேலை பார்த்தார். தேசபக்தி ஜாஸ்தி உடையவர். இப்போது சமையலராக மாறியுள்ளார்.

சப்பாத்தியும் சோக்காவும்
தனது சமையல்முறை குறித்து கார்கில் கூறுகையில், நாங்கள் சப்பாத்தி, சோக்கா - அதாவது வெங்காயம், கொத்தமல்லி, எலுமிச்சம்சாறு மற்றும் உருளைக்கிழங்கு, மிளகாய்ப் பொடி கலந்த கலவை- ஆகியவற்றை தினசரி சமைப்போம். நான் கோழிக்கறி சமைப்பதில் எக்ஸ்பர்ட் என்றார்.

சமையல் நேரம்
இவர்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும்,பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் வேலை பார்க்கிறார்கள்.

சென்னைவாசிகளும் ரசிகர்கள்
இவர்களின் சாப்பாட்டுக்கு வட இந்தியர்கள் மட்டுமல்ல,சென்னைவாசிகளும் கூட வாடிக்கையாளர்களாகியுள்ளனர்.காரணம்,இந்த சாப்பாட்டின் ருசியும்,பீகாரிகளின் கைப்பக்குவமும்.
ஜெய்ஹிந்த்..தம்பி ரெண்டு சப்பாத்தி போடுப்பா...!
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications