செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் அம்மாவை செங்கோட்டைக்கு அனுப்ப வேண்டும்: நாஞ்சில் சம்பத்

Subscribe to Oneindia Tamil

Nanjil Sampath
திருநெல்வேலி: செயின்ட் ஜார்ஜ் கோர்ட்டையில் இருக்கும் தமிழக முதல்வரை டெல்லி செங்கோட்டைக்கு பிரதமராக அனுப்பிவைக்க வேண்டும் என்று துணை கொள்கைப் பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிட நாளும் போராடி உச்சநீதிமன்றம் வரை சென்று வெற்றிபெற்ற தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாஞ்சில்சம்பத் பேசியதாவது:

இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்,அந்நாட்டின் மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் நமது தமிழக முதல்வர்.

இந்த தீர்மானங்களை அமுல்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றால் இநதியாவின் பிரதமராக நமது தமிழக முதல்வர் இருக்கவேண்டும்.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு கூடாது என்பதில் முதலில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு பாராளுமன்றத்தில் ஆதரித்து திமுக வாக்களித்தது. ஆனால் முதலில் இருந்து கடைசிவரை அன்னியமுதலீடு கூடாது என கருத்து தெரிவித்த ஒரே கட்சி அதிமுக மட்டும்தான்.

தமிழகத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக ரூ14ஆயிரம் கோடி நிதி ஒதுககீடு செய்து 1ம் வகுப்பு முதல் கல்லூரி வரை செல்லும் மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

மின்சாரம் பற்றாக்குறையை நீக்கவும், காவிரிதண்ணீர் பிரச்சனையை தீர்க்கவும், முல்லைபெரியாறு என அனைத்து பிரச்சனைகளிலும் தமிழகத்திற்கு வந்து சேரவேண்டிய நீதி கிடைக்கவேண்டுமானால், தமிழகமுதல்வரை செயின்ட்ஜார்ஜ் கோட்டையிலிருந்து டெல்லி செங்கோட்டைக்கு அனுப்பவேண்டும் என்று கூறினார் நாஞ்சில் சம்பத்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+