குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை.. மோசமான நிலையிலிருந்து அபார நிலைக்கு மாறிய குஜராத்
டெல்லி: குஜராத்தில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை 48%. இது மிகவும் ஏழ்மையான சோமாலியா நாட்டை விட அதிகம் என்று மார்க்கண்டேய கட்ஜூ ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தொடங்கி மார்க்கண்டேய கட்ஜூ வரைக்கும் குஜராத்தின் ஊட்டச்சத்து குறைபாடு பற்றியே பேசியும் எழுதியும் வந்துள்ளனர். ஆனால் குஜராத் மாநிலம் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது என்று சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011 மார்ச் 31 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு படிப்படியாக குறைந்து கொண்டே வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலத்தில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள குஜராத்தில் மனிதர்களின் ஊட்டச்சத்து குறைபாடும் வறுமையும் எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் தற்போது இந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஊட்டச்சத்து பற்றாக்குறையின் விகிதாச்சாரம் குறைந்து போயுள்ளது குஜராத்தில்.
குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடி தொழில்துறை வளர்ச்சி, மின் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது எல்லாம் இருக்கட்டும். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்தட்டும் என்று கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்து வந்தன எதிர்கட்சிகள். தற்போது இந்த பிரச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளத குஜராத்.

பீகாரில் ஊட்டச்சத்து குறைபாடு மோசம்
2011 மார்ச் கணக்கெடுப்பின் படி பீகார் மாநிலத்தில்தான் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் 82 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதுவே 2005-06ம் ஆண்டுகளில் 55.9 சதவிகிதமாக இருந்தது.

ஆந்திரா, டெல்லியிலும் அதிகம்
காங்கிரஸ் ஆளும் மாநிலமான ஆந்திராவில் தற்போது ஊட்டச்சத்து குறைபாடு 49 சதவிகிதமாக உள்ளது. இது 2005-06 ல் 32சதவிகிதமாக இருந்தது. ஷீலா தீக்ஷித் ஆளும் டெல்லியில் 50 சதவிகித குழந்தைகள் தற்போது ஊட்டச்சத்து குறைபாடுடன் இருக்கின்றனர். அதே சமயம் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் 43 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், உத்தரகண்ட்
இந்தியவில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேஷ், உத்தரகண்ட் மாநிலங்களில் அதிக அளவில் ஊட்டச்சத்துள்ள குழந்தைகள் காணப்படுகின்றனர். மகாராஷ்டிராவில் 77 சதவிகித குழந்தைகளும், மத்திய பிரதேச மாநிலத்தில் 72 சதவிகிதம் குழந்தைகளும் போஷாக்குடன் உள்ளனர். அதேபோல் உத்தரகண்ட் மாநிலத்தில் 75 சதவிகித குழந்தைகள் போஷாக்காக உள்ளனர்.

தமிழ்நாட்டில் 35 சதவிகிதம் பேர்
தமிழ்நாட்டில் உள்ள 35.22 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் திகழ்கின்றனர். இது கடந்த 2007ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 சதவிகிதம் குறைவாகும்.

70ல் இருந்து 38 ஆக குறைந்த குஜராத்
2007 மார்ச் 31 கணக்கெடுப்பின் படி குஜராத்தின் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் 70.69. அப்போது இந்திய அளவில் ஊட்டச்சத்து குறைபாடு 50.1 சதவிகிதமாக இருந்தது. அதே சமயம் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பில் குஜராத் மாநிலத்தின் ஊட்டச்சத்து குறைபாடு 38.77 சதவிகிதமாக குறைந்துவிட்டது. அதே சமயம் இந்திய அளவில் தற்போது ஊட்டச்சத்து குறைபாடு 41.16 சதவிகிதமாக உள்ளது.

மோடியால் எப்படி முடிந்தது?
இது நரேந்திர மோடியின் குறிப்பிடத்தக்க சாதனை. அவர் தொழில் துறை வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்த வில்லை மக்களின் ஆரோக்கியத்திலும், வறுமை ஒழிப்பிலும் கூட கவனம் செலுத்தியுள்ளார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

கவனம் செலுத்திய மாநிலங்கள்
குஜராத் மட்டுமல்லாது இந்தியாவில் பல மாநிலங்கள் இதில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளன. கர்நாடகா 53 சதவிகிதத்தில் இருந்து 41 சதவிகிதமாகவும், மகாராஷ்டிரா 45ல் இருந்து 23 சதவிகிதமாகவும், உ.பி 53ல் இருந்து 41 ஆகவும், உத்தர்கண்ட் 46ல் இருந்து 25 ஆகவும் குறைந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்திலும் 53 சதவிகிதத்தில் இருந்து 37 சதவிகிதமாக குறைந்துள்ளது.

விமர்சனங்களை நொறுக்கிய மோடி
குஜராத்தை விட பீகார் டாப் என்று கூறிவந்தனர். ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் பீகார்தான் இந்திய அளவில் அதிக ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் வசிக்கும் மாநிலமாக திகழ்கிறது. குஜராத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் சதவிகிதம் 4.56 சதவிகிதமாக குறைந்துவிட்டது. அதே சமயம் பீகாரில் 26 சதவிகித குழந்தைகள் கடுமையான ஊட்டத்து குறைபாடினால் பாதிக்கப்பட்டுள்ளன.
எதிர்கட்சிகளின் விமர்ச்சனங்களைப் பற்றி கவனத்தில் கொள்ளலாமல் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய மோடி மேற்கொண்ட செயல்பாடுகளே இத்தகையை முன்னேற்றத்திற்கு காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications