குட்மார்னிங் டியர், இன்னிக்கு பெட்ரோல் விலை எவ்ளோ...?

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப தினசரி இந்தியாவிலும் விலையை நிர்ணயம் செய்ய விரைவில் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கப் போகிறதாம். அப்படி நடந்தால், இனிமேல் தினசரி பெட்ரோல் விலை மாறும்.
இதுகுறித்து அரசுத் தரப்பில் கூறுகையில், இந்த யோசனை குறித்து பெட்ரோலியத் துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பான கொள்கை குறிப்பை உருவாக்குமாறு இந்தியன்ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தத் திட்டம் அமலுக்கு வரும்.
இருப்பினும் இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தொடக்க நிலையில்தான் உள்ளது. ஆலோசனை அளவில்தான் உள்ளது. அமலாக்குவதற்கு நாட்கள் ஆகலாம்.
தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை மாற்றப்படுகிறது. மேலும் மாதத்தின் கடைசி நாளிலும் விலை நிலவரம் மறு ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. இதை மாற்றி, தினசரி விலையை நிர்ணயம் செய்வதன் மூலம், சர்வதேச விலைக்கேற்றபடி இங்கும் பெட்ரோலியப் பொருட்களை விற்கலாம். நஷ்டத்தையும் கணிசமாக குறைக்கலாம்.
இருப்பினும் இந்தத் திட்டத்திற்கு அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பு உருவாகும் என்று அரசு கருதுகிறதாம். பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது. எனவே இதுகுறித்து தீவிர ஆய்வுக்குப் பின்னரே அரசு நடவடிக்கையில் இறங்கும் என்று தெரிகிறது.
இருப்பினும் தினசரி விலை நிர்ணயம் செய்வதால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று அரசு கருதுகிறது. அதாவது இன்று சர்வதேச சந்தையில் பெரிய அளவில் விலை குறைந்தால் அதேபோல இங்கும் பெட்ரோல் விலை பெருமளவில் குறையும். அதிகரித்தால், இங்கும் அதிகரிக்கும். எனவே மொத்தமாக விலை ஏறுவதைத் தவிர்க்க முடியும்.
தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரேசில் போன்ற நாடுகளில் தினசரி பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications